கன்னியாகுமரியின் மாயம்மா -kanniyakumariyin Mayamma

 வணக்கம் நேயர்களே !

மாயம்மா கடல் அன்னையா ? கடற் கன்னியா ?:

மாயம்மா தினசரி கடலில் குளிக்க இறங்கும் இடம் பாறைகள் நிறைந்த பகுதி. சாதாரண மனிதர்கள் யாருமே ஏன் மீனவர்கள் கூட இறங்க அஞ்சும் இடம் அது . பழகிய பாதையில் நடப்பதைப் போல் கடலின் பகுதியில் இறங்கிச்  செல்வார்..அலைகளுக்கு விளையாட்டுக்கு காட்டிக் கொண்டு கிளிஞ்சல்களையும் , பாசிகளையும் எடுப்பார்..அம்மாவின் தினசரி கடமைகளில் இதுவும் ஒன்று. அவற்றைப் எடுத்து கரையில் இருக்கும் அவரின் சீடர் ராஜேந்திரனிடம் கொடுப்பார் . இவற்றை சேகரித்து நெருப்பைக் கூட்டி  அதில் போட்டு கொளுத்துவார்கள் .அதை பார்ப்பதற்கு யாகம் செய்வது போன்று இருக்கும். அதன் பின்பு, அந்த சாம்பலை கடலில் கரைத்துவிடுவார் ..அவர் இவ்வாறு எரித்து கரைப்பது உலக மக்களின் பாவங்களை என்று யாரும் அறியவில்லை...அம்மா கடலில்  கரைத்தது நம் பாவங்களை தான். விவேகானந்தர் பாறை இல்லாக் காலங்களிலும், அந்த பாறை வரை நீந்தியே செல்வாராம். அம்மா அந்த வயதிலும், வழுக்கும் சிறிய பாறையில் கால் வைத்து அடுத்த பாறையில் தாண்டுவது ஆச்சர்யமான செய்கை . சிலசமயம் அலைவீசும் பகுதியில் மிதக்கக் கூட செய்வாராம். கடலில் இருந்து சங்கால் செய்யப்பட்ட ஒரு விநாயகர் சிலையும், ஒரு சிவன் சிலையும் எடுத்து வந்தாரம் . இன்றும் அந்த சிலைகள் மாயம்மா சமாஜத்தில் இருக்கிறது.கடற்கன்னிக்கும் நீரில் தான் அதிக சக்திகள் உண்டு என்பதை நம் கதைகளிலும், திரைப்படங்களிலும் பார்த்துஇருக்கிறோம். அதனால் , சிலர் அம்மாவை கடற்கன்னி என்றும் சொல்வது உண்டு. ஒரு சாதாரண 60 வயது பெண்மணியால் இது எல்லாம் சாத்தியம் ஆகுமா?அதுவும் கன்னியாகுமரி கடல் ஆபத்துகள் நிறைந்த ஆழமான பகுதியை கொண்டது...புயல் காலங்களில் மீனவர்களையேக் காப்பாற்றிய நிகழ்வுகளும் உண்டு . குமரியின் கடல் அன்னையால் மட்டுமே இது சாத்தியம் என்று தோன்றுகிறது...மாயம்மா அன்னை பராசக்தியின் வடிவம் என்பதற்கு இதுவே சாட்சி...


                                                   ( Kanniyakumari Mayamma temple)

அம்மாவின் இறுதி காலம்:
மாயம்மாவை அந்நாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி முதல் பெரிய தலைவர்கள் வரை சந்தித்து ஆசி பெற்றதாக  சொல்கிறார்கள்..இசைஞானி இளையராஜாவும் அம்மாவை சந்தித்து ஆசிப் பெற்றதாகவும், அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்ததாகவும் அவரது சீடர்கள் கூறினார்கள்.
1986-ம் ஆண்டு, ராஜேந்திரனுடன் குமரியை விட்டு, சேலம் வந்தார்கள்..ஆனால் , அதன் பின்பும்,அவரை குமரியில் பார்த்ததாக  மக்கள் கூறுகின்றனர். அந்த கடல் அன்னையின் உடல் மட்டுமே அங்கு சென்றதாக எனக்கு நினைக்க தோன்றுகிறது...60 ஆண்டுகள் அலைந்து திரிந்த இடத்தில தான் அம்மாவின் ஆன்மா இருக்க விருப்பப்பட்டிருக்கும்..இது என்னுடைய கருத்து மட்டுமே..
9-2-1992 அன்று 4.40 மணிக்கு மாயம்மா ஜீவசமாதி அடைந்தார்..அப்பொழுது ஆஷா என்ற பெண்மணி அம்மாவின் உடன் இரவு முழுவதும் இருந்தார். அவர் கூறியதாவது, " இறந்த பின்பும், அம்மாவின் உடல் உஷ்ணமாக தான் இருந்தது...வியர்வை உடல் முழுவதும் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது..நான் ஒரு துணியே வைத்து துடைத்துக் கொன்டே இருந்தேன்...அவரின் உயிர் ஒரு மாபெரும் சூரிய ஒளியேப் போன்று வானை நோக்கி சென்றது என்று கூறினார். மேலும், அவருடன் இருந்தது என் வாழ் நாள் பாக்கியம் என்றும் கூறினார்.




                                              
                                                   (SALEM MAYAMMA JEEVASAMADHI)

இப்பொழுதும் அம்மாவை தரிசிப்பது எப்படி?
அம்மாவின் ஜீவசமாதி சேலம் இல் சின்னகொல்லப் பட்டி என்ற  இடத்தில்  இருக்கிறது..சேலம் சென்றால் நிச்சயம் இந்த ஜீவசமாதிக்கு சென்று வாருங்கள்..மனஅமைதி கிடைக்கும்...
இப்பொழுதும் அம்மாவை தரிசிக்க ஒரு எளிய வழியே தன் சீடர்களிடம் அம்மா கூறி சென்று இருக்கிறார்.
"கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் , நான் தரிசனம் தருவேன் என்று அம்மா கூறியிருக்கிறாராம் " அம்மாவை தரிசிக்க விரும்புவர்கள், இந்த எளிய  வழியே பின்பற்றி அம்மாவின் தரிசனத்தைப் பெறுவோம்..இந்த அற்புத தாய், நம் வாழ்விலும் பல நல்ல மாற்றங்களையும், அற்புதங்களையும் புரிவார் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை..என் முதல் பதிவு அம்மா வைப் பற்றி எழுத தூண்டியதை மாயம்மா தாயின் ஆசியாகவே கருதுகிறேன் ....அடுத்த பதிவில் சந்திப்போம் நேயர்களே.....



                                                                           (SUNSET)

Mayamma Samadhi Salem address:
Mayamma Temple, Law college, 
Shanthi Nagar, Chinnakollapatty, Salem, 
Tamil Nadu -636008

CONTACT NUMBER: 9677671177
WEBSITE ADDRESS: mayamma.org/lander

Opening time: 6:30 AM – 1:00 PM, 4:00 – 7:30 PM (For all days)


Comments

Post a Comment

Popular posts from this blog

சித்தர்களின் வரலாறு (Sitthargalin History)

கன்னியாகுமரியின் மாயம்மா (Kanniyakumariyin Mayamma)