கன்னியாகுமரியின் மாயம்மா (Kanniyakumariyin Mayamma)

வணக்கம் நேயர்களே !
       என் பெயர் இந்துமதி. என்னுடைய முதல் பதிவு இது. என் அம்மா என்னுடைய சிறுவயதில் கூறுவார்.இந்துமதி ஒரு  பிரபலமான எழுத்தாளர் (Famous writer ). அவரைப் போன்று நீயும் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று (அந்த அளவுக்கு நமக்கு அறிவு இல்லைங்க ). தமிழ் மீது இருக்கும் ஆர்வத்தினால் எழுத தொடங்கியிருக்கிறேன். இந்த பதிவில் நான் மாபெரும் சித்த புருஷி ஸ்ரீ தேவி "அன்னை மாயம்மா"(Mayamma) பற்றி எழுதவிருக்கிறேன். நான் அண்மையில் படித்து வியந்த செய்திகளை பகிர விரும்புகிறேன் .

                                        "நீலத்திரை கடல் ஓரத்திலே 
                                         நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை "

என்பது கவிஞர் பாரதியின் வாக்கு. இந்த உலக நன்மைக்காக நாளும் தவம் செய்து கொன்டே இருக்கிறாள் குமரி அன்னை என்று கூறுகிறார். 
"குமார்" என்ற தெய்வம் இந்தியாவின் தெற்க்கே கடற்கரையில் குடி கொண்டிருந்தது என்று கிரேக்க அறிஞன் பெரிபுளுஸ் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார். இந்தியாவின் தென் கோடியில் இருந்து குமாரி அன்னை நம்மை காப்பது உண்மை . 


                        
                                                           (தேவி ஸ்ரீ மாயம்மா )

மாயம்மாவின் வருகை:

மாயம்மா எங்கிருந்து வந்தார் ? எப்படி வந்தார் ? என்பது யாருக்கும் தெரியாது..அவர் பெயர் கூட யாரும் அறியவில்லை. மாயங்கள் பல செய்ததால் மாயம்மா என்று அழைக்கப்பட்டார்.  ரிஷிமூலம் நதிமூலம் அறியகக்கூடாது என்பது பெரியோர் வாக்கு. இருப்பினும் 1920- களில் தான் மாயம்மா குமரிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.
1920-இல் வங்காள மாநிலத்திலிருந்து பயணிகள் சிலர் குமரிக்கு வந்தனர். அவர்களோடு வந்ததாகவும்,வந்தவர்கள் இவரை தனியாக விட்டு சென்றனர் என்றும் கூறுகின்றனர். அப்போது அம்மா விற்கு வயது 40 இருக்கும். ஆரம்பத்தில் ஊரில் உள்ளவர்களுக்கு மாவிடுத்து கொடுத்ததும், மாவரைத்துக்  கொடுத்ததும் சாப்பிட்டு வந்தார். திருச்சியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் "அம்மா நேபாளத்தை சேர்ந்தவர் " என்று கூறுகிறார். இன்னும் சிலர் அஸ்ஸாமில் இருக்கும் காமாக்யா தேவியின்  அவதாரமாக கருதுகின்றனர். 1960-70 களில் பிறந்தவர்கள் கன்னியாகுமரி சென்றிருந்ததால் நிச்சயம் மாயம்மாவை தரிசிக்கும் வாய்ப்பு பெற்றியிருப்பர்.என் அம்மாவும் சிறு வயதில் மாயம்மாவைப் பார்த்ததாக சொல்லியிருக்கிறார்.
ஆரம்பத்தில் அம்மாவைப் பற்றி கேட்டால் அவர் ஒரு மனநலம் பிடித்தவர் (Mental complex) என்று அங்கிருக்கும் மக்கள் கூறுவார். ஏன் என்றல் அவரின் தோற்றம் ,செய்கைகள் அப்படி இருந்தது.  கிழிந்த கந்தலான ஆடை, கலைந்த முடி, சுற்றிலும் 3, 4 நாய்கள், முற்றிலும்  ஒரு பிட்சியே போன்ற தோற்றம்...கடும் குளிரிலும் கடற்கரையில் இருப்பார்.புயல் நேரத்திலும் நீரில் அச்சமின்றி இறங்குவார்.பசி என்பதே கிடையாது. எப்பொழுது உறங்குவார் என்றும் தெரியாது.அவரின் சக்தியே பற்றி எவரும் அறியவில்லை அப்பொழுது..



                                                     (பைரவர்களுடன் அம்மா )
 

அவரை  யாரும் கண்டுகொள்ளா நிலையில் அவர் ஒரு "முக்தி ஜீவன்" என்று அடையாளம் காட்டியது தெருவோர பைரவர் (நாய்) தான்...1950-இல் ஒரு tourist பஸ் -ல் அடிபட்டு சாலையில் இறந்து கிடந்தது அந்த ஜீவன்...அருகில் எவரும் செல்லவில்லை.அதன் குடல் வெளியே வந்து இருந்தது..அம்மமா நாயின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அது ஏன்  என்று யாருக்கும் தெரியவில்லை.இன்றும் கன்னியாகுமரியில் அம்மா வின் கோவில் அருகே நாய்களை காணலாம்....அந்த கருணை உள்ளம் கொண்ட தாய் நாயின் அருகில் வந்தார்.அதன் குடலை ஒரு குட்சியால் உள் வைத்து மூடி தள்ளி வைத்தார்..என்ன ஆச்சர்யம்!. சிறுது நேரத்தில் அந்த ஜீவன் உயிர்பெற்று ஓடியது...அதன் பிறகு தான், அன்னையின் புகழ் குமரி எங்கும் பரவியது..அதன் பின்பு, ஆரம்பத்தில் உணவு தர மறுத்தவர்கள் உணவு பொட்டலத்துடன் வரிசையில் நின்றார்கள். கடைக்காரர்கள் நமது கடையில் அம்மாவின் பாதம் படாதா என்று ஏங்கினராகள்.அம்மா வந்தால் கடையில் வியாபாரம் அன்று சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை...அது உண்மையும் கூட.அம்மாவின் கையால் பணம் வாங்கி தொழில் நடத்தி லட்சாதிபதி ஆனவர் பல பேர்..

பக்தர்களின் செய்தி :

திரு ராஜமாணிக்கம் என்பவர் மாயம்மா சமாஜத்தின் தலைவர். தூத்துக்குடி தொழிலதிபர்..சிறந்த பக்தரும் கூட.அவர் திருவண்ணாமலை ஞான ஆனந்த ஸ்வாமிகளின் வாயிலாக அம்மாவைப் பற்றி அறிந்து கொண்டார். அம்மாவின் தீவிர பக்தரானார் . 1975-ல் அம்மா தங்குவதற்கு குமரியில் ஓலைக் குடிலை அமைத்துக் கொடுத்தார். அவர் தினமும் சாப்பிடுவதறகான செலவையும் ஏற்றார். பின்னர், மாயம்மாவின் சமாஜத்தை 4 லட்சம் தன்  சொந்த செலவிலேயே கட்டி முடித்தார் எனவும் அம்மா பக்தர்கள் கூறினர்.


                                                            (தன் பக்தர்களுடன் அம்மா )


சரோஜினி என்பவர் அம்மாவின் தீவிர பக்தை. அவர் மாயம்மா பற்றி " அம்மா யாரிடமும் அதிகம் பேசமாட்டார். பேசினாலும் புரிந்து கொள்ள முடியாது. யார் எந்த மொழியில் பேசினாலும் அதை அப்டியே பேசும் ஆற்றல் கொண்டவர்...தனக்கு என்று ஏதும் வைத்து கொள்ளாதவர். தனக்கு கிடைக்கும் உணவைக் கூட நாய்களுக்கு கொடுத்து விடுவார். காசு, பணம் கிடைத்தாலும் தனக்கு தோன்றியவருக்கு கொடுத்து விடுவார். மாயம்மா  சாதாரணமானவர் அல்ல...அஷ்டமா சித்து அறிந்தவர்..சாட்சாத் ஈஸ்வரியின் அம்சம்..பராசக்தியின் மறுஉருவம்...தேவி குமரியின் மறுஅவதாரம் என்று கூறினார். மேலும் 1974-இல் ஜப்பானில் இருந்து ஒரு யோகி வந்ததாகவும் அவர் தினமும் அம்மாவிற்கு உணவு வாங்கி கொடுத்து அவர் ஏதும் உண்ணாமலையே தன் உயிரை குமரியிலேயே விட்டதாகவும் கூறினார்..இப்படி அம்மாவின் சக்திகளை அறிந்தவர்கள் வெகு சிலரே..அம்மா கன்னியகுமாரியிலே சுற்றி திரிந்தும் கடைசி வரை கோவிலுக்குள் சென்றதில்லை என்பது ஆச்சர்யமான உண்மை என்றும் கூறினார்...

அடுத்த பதிவில் மாயம்மாவைப்  பற்றி மேலும் பார்க்கலாம். என் முதல் பதிவை என் அம்மாவிற்கு சமர்ப்பிக்குறேன். நன்றி !

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

Comments

  1. It's very new to me.. Interesting, waiting to know more. ..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சித்தர்களின் வரலாறு (Sitthargalin History)