சித்தர்களின் வரலாறு (Sitthargalin History)
வணக்கம் நேயர்களே! இந்த பதிவில் சித்தர்களின் வரலாறு பற்றி பார்க்க இருக்கிறோம். சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள். சித்து என்னும் சொல் 'சித்தம்' என்னும் சொல்லில் இருந்து தோன்றியது. சித்தத்தை வென்றவன் சித்தன் என்றும் அவனது அருளனுபவ நிலை 'சித்து' அல்லது 'சித்தி' என்றும் கூறலாம். சிவனுக்கு சித்தன் என்ற பெயரும் உண்டு..சிவனே ஆதி சித்தன் என்று கூறுவர். சம்பந்தரால் பாடப்பெற்ற திருநறையூர் சித்தீஸ்வரம் என்று வழங்கப்பெறுகிறது . சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையில் உள்ள சிவன் கோவில் சித்தர் கோவில் என்று தான் அழைக்கப்படுகிறது. எனவே, சிவனை வழிபட்டவர்கள் 'சித்தரகள்' என்று அழைக்கப்பட்டனர். தமிழ் மண்ணின் பொக்கிஷங்களாக போற்றப் பட வேண்டியவர்கள் சித்தர்கள்..உலகமே இன்று கொண்டாடும் யோகா கலையின் பிதாமகன்கள்...அதனால் சிவனை "ஆதியோகி" என்று கூறுகின்றனர்.. சித்தர்கள் யோக பலத்தால் செய்த சாகசங்களும், வாழ்ந்த காலங்களும் நம்மால் நம்ப முடியாத உண்மைகள்.. ஏன் சித்தர்கள் என்றால் அத்தனை முக்கியத்துவம். இவர்கள் , நம் பிறப்பின் நோக்கத்தை அறிவித்து, இறைவனிடம்...

Comments
Post a Comment