Posts

Showing posts from August, 2024

சித்தர்களின் வரலாறு (Sitthargalin History)

 வணக்கம் நேயர்களே! இந்த பதிவில் சித்தர்களின் வரலாறு  பற்றி பார்க்க இருக்கிறோம். சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள்.  சித்து  என்னும் சொல் 'சித்தம்' என்னும் சொல்லில் இருந்து தோன்றியது. சித்தத்தை வென்றவன் சித்தன் என்றும் அவனது அருளனுபவ நிலை 'சித்து' அல்லது 'சித்தி' என்றும் கூறலாம். சிவனுக்கு சித்தன் என்ற பெயரும் உண்டு..சிவனே ஆதி சித்தன் என்று  கூறுவர்.  சம்பந்தரால் பாடப்பெற்ற திருநறையூர் சித்தீஸ்வரம் என்று வழங்கப்பெறுகிறது . சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையில் உள்ள சிவன் கோவில் சித்தர் கோவில் என்று தான் அழைக்கப்படுகிறது. எனவே, சிவனை வழிபட்டவர்கள் 'சித்தரகள்' என்று அழைக்கப்பட்டனர். தமிழ் மண்ணின் பொக்கிஷங்களாக போற்றப்  பட வேண்டியவர்கள் சித்தர்கள்..உலகமே இன்று கொண்டாடும் யோகா கலையின் பிதாமகன்கள்...அதனால் சிவனை "ஆதியோகி" என்று கூறுகின்றனர்.. சித்தர்கள் யோக பலத்தால் செய்த சாகசங்களும், வாழ்ந்த காலங்களும் நம்மால் நம்ப முடியாத உண்மைகள்.. ஏன் சித்தர்கள் என்றால் அத்தனை முக்கியத்துவம். இவர்கள் , நம் பிறப்பின் நோக்கத்தை அறிவித்து, இறைவனிடம்...

கன்னியாகுமரியின் மாயம்மா -kanniyakumariyin Mayamma

Image
  வணக்கம் நேயர்களே ! மாயம்மா   கடல் அன்னையா ? கடற் கன்னியா ?: மாயம்மா தினசரி கடலில் குளிக்க இறங்கும் இடம் பாறைகள் நிறைந்த பகுதி. சாதாரண மனிதர்கள் யாருமே ஏன் மீனவர்கள் கூட இறங்க அஞ்சும் இடம் அது . பழகிய பாதையில் நடப்பதைப் போல் கடலின் பகுதியில் இறங்கிச்  செல்வார்..அலைகளுக்கு விளையாட்டுக்கு காட்டிக் கொண்டு கிளிஞ்சல்களையும் , பாசிகளையும் எடுப்பார்..அம்மாவின் தினசரி கடமைகளில் இதுவும் ஒன்று. அவற்றைப் எடுத்து கரையில் இருக்கும் அவரின் சீடர் ராஜேந்திரனிடம் கொடுப்பார் . இவற்றை சேகரித்து நெருப்பைக் கூட்டி  அதில் போட்டு கொளுத்துவார்கள் .அதை பார்ப்பதற்கு யாகம் செய்வது போன்று இருக்கும். அதன் பின்பு, அந்த சாம்பலை கடலில் கரைத்துவிடுவார் ..அவர் இவ்வாறு எரித்து கரைப்பது உலக மக்களின் பாவங்களை என்று யாரும் அறியவில்லை...அம்மா  கடலில்   கரைத்தது நம் பாவங்களை தான். விவேகானந்தர் பாறை இல்லாக் காலங்களிலும், அந்த பாறை வரை நீந்தியே செல்வாராம். அம்மா அந்த வயதிலும், வழுக்கும் சிறிய பாறையில் கால் வைத்து அடுத்த பாறையில் தாண்டுவது ஆச்சர்யமான செய்கை . சிலசமயம் அலைவீ...

கன்னியாகுமரியின் மாயம்மா (Kanniyakumariyin Mayamma)

Image
வணக்கம் நேயர்களே !        என் பெயர் இந்துமதி. என்னுடைய முதல் பதிவு இது. என் அம்மா என்னுடைய சிறுவயதில் கூறுவார்.இந்துமதி ஒரு  பிரபலமான எழுத்தாளர் (Famous writer ). அவரைப் போன்று நீயும் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று (அந்த அளவுக்கு நமக்கு அறிவு இல்லைங்க ). தமிழ் மீது இருக்கும் ஆர்வத்தினால் எழுத தொடங்கியிருக்கிறேன். இந்த பதிவில் நான் மாபெரும் சித்த புருஷி ஸ்ரீ தேவி "அன்னை மாயம்மா"(Mayamma) பற்றி எழுதவிருக்கிறேன். நான் அண்மையில் படித்து வியந்த செய்திகளை பகிர விரும்புகிறேன் .                                         "நீலத்திரை கடல் ஓரத்திலே                                           நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை " என்பது கவிஞர் பாரதியின் வாக்கு. இந்த உலக நன்மைக்காக நாளும் தவம் செய்து கொன்டே இருக்கிறாள் குமரி அன்னை என்று கூறுகிறார்.  "குமார்" என்ற தெய்வ...

அனைவரையும் என் வலை தளத்திற்கு வரவேற்கிறேன்.

Image